எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்


காற்று வீசியபடியே இருக்கிறது. பாய் மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக் கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. அது போல உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள்.

-சுவாமி விவேகானந்தர்உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். 
உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

-சுவாமி விவேகானந்தர்
திருமணம் ஒரு சுவையான  நவீனம், அதன் முதல் அத்தியாயத்திலேயே கதாநாயகன்  இறந்து விடுகிறான்.

-காண்டேகர் 
மன உறுதி மட்டும் இருந்தால் போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால் தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.

-ஷெல்லி